ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அமரன். இந்த படம், வரும் அக்டோபர் 31-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில், இப்படம் விமர்சனம் ஒன்றில் சிக்கியிருந்தது. அந்த விமர்சனத்திற்கு, நடிகர் சிவகார்த்திகேயன் விளக்கம் கொடுத்துள்ளார்.
அதாவது, அமரன் படத்தில் இடம்பெற்ற லுக் அனைத்திலும், நடிகர் சிவகார்த்திகேயன் தாடியுடன் இருந்தார். ராணுவத்தில் பணிபுரியும் கதாபாத்திரம், தாடியுடன் எப்படி இருக்க முடியும் என்று, நெட்டிசன்கள் சிலர் கேள்வி எழுப்பி வந்தனர். அதற்கு தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார்.
அந்த விளக்கத்தில் பேசியுள்ள அவர், “அது 44 ராஷ்ட்ரியா ரைபிள்ஸ் என்று ஒரு சிறப்பு அணி. அவர்களுக்கு தாடி பற்றிய கட்டுப்பாடுகள் இல்லை. அவர்கள் சில நேரங்களில் மக்களோடு மக்களாகவும் இருப்பார்கள். அதனால் தான் தாடி வைத்துக் கொண்டு இருப்பது போல், அந்த கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.