டிராப் ஆன தனுஷின் முக்கிய படம்? ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்திய சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். சிறந்த நடிகருக்கான தேசிய விருதை 2 முறை பெற்றுள்ள இவர், தற்போது இட்லிக் கடை என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார்.

இந்நிலையில், தனுஷ் நடிக்க உள்ள முக்கிய படம் குறித்து, அதிர்ச்சி தகவல் ஒன்று கசிந்துள்ளது. அதாவது, இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து, புதிய படம் ஒன்று உருவாக இருந்தது.

இந்த படத்தில், நடிகர் தனுஷ் நடிப்பதாகவும், அருண் மாதேஸ்வரன் இயக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், தற்போது வந்துள்ள தகவலின்படி, இப்படம் டிராப் ஆகியுள்ளதாம். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள், கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News