தொண்டர்களின் உற்சாக முழக்கத்துடன் தவெக மாநாடு தொடங்கியது!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலையில் ‘வெற்றிக் கொள்கைத் திருவிழா’ என்ற பெயரில் இன்று (அக். 27) மாலை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மாலை 4 தொடங்க இருந்த மாநாடு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக தொண்டர்களின் ஆர்ப்பரிப்புடன் தொடங்கியது.

கட்சியின் முதல் மாநாடு என்பதால், விஜய் என்ன பேச உள்ளார். கட்சியின் கொள்கைகள் என்ன, அவர் எந்த மாதிரியான அரசியலை முன்னெடுக்கப் போகிறார் என்று தமிழக மக்களும், பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

RELATED ARTICLES

Recent News