சினிமாவில் அரசியல் பேசி வரும் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் பா.ரஞ்சித். எந்தவொரு சமூக பிரச்சனை நடந்தாலும் குரல் கொடுத்து வரும் இவர், தற்போது தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், ”“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற புவியியல் அமைப்பின் அடிப்படையான தத்துவத்தை தாங்கி தன் முதல் அரசியல் மேடை பேச்சை முடித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் திரு.விஜய் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு மற்றும் சாதி மத வர்க பிரிவினை வாதத்திற்கும் ஊழலுக்கும் எதிராக செயல்படப்போவதாக அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். மகிழ்ச்சி” என்று அவர் கூறியுள்ளார்.
நேற்று நடந்த விஜயின் மாநாடு குறித்தும், அவரது பேச்சு குறித்தும், இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ள கருத்து, சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்து வருகிறது.