தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் மணிரத்னம். இவர் பல்வேறு தனித்துவமான காதல் கதைகளையும், கதாபாத்திரங்களையும் உருவாக்கியுள்ளார்.
அந்த வகையில், அலைபாயுதே படத்தில், மணிரத்னம் உருவாக்கிய, மாதவன், ஷாலினி நடித்த கார்த்திக் – ஷக்தி கதாபாத்திரம், ரசிகர்கள் மனதில் இன்றளவும் நிறைந்திருக்கிறது.
இந்த படத்திற்கு பிறகு, இவர்களின் ஜோடி மீண்டும் இணையவே இல்லை. இவ்வாறு இருக்க, ஷாலினி அஜித்குமார், தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், என்றென்றும் புன்னகை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், மாதவனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.