நடன இயக்குநராக தனது பயணத்தை தொடங்கிய ராகவா லாரன்ஸ், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என்று பல்வேறு முகங்களை கொண்டிருக்கிறார்.
இவர் நடித்திருந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம், சமீபத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இவரது அடுத்த படம் தொடர்பான அப்டேட் வெளியாகியுள்ளது.
அதாவது, ரமேஷ் வர்மா என்ற தெலுங்கு இயக்குநர் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார். இவரது 25 வது படமாக உருவாக உள்ள இதன் அறிவிப்பு, கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகியிருந்தது.
தற்போது, இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும், படத்திற்கு கால பைரவா என்று பெயரிடப்பட்டிருப்பதாகவும் அந்த போஸ்டரில் கூறப்பட்டுள்ளது.