இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தவர் மேஜர் முகுந்த் வரதராஜன். நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த இவரது வாழ்க்கை வரலாறு, தற்போது அமரன் என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள இந்த திரைப்படத்தை, ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இந்நிலையில், இந்த திரைப்படம், ராணுவத்தில் உயர் பதவிகளில் உள்ள அதிகாரிகளுக்கு திரையிடப்பட்டுள்ளது.
படத்தை பார்த்த அவர்கள், படத்திற்கு மிகவும் பாசிட்டிவ்வான கமெண்ட்ஸ்களை தெரிவித்துள்ளார்களாம். இதனால், இப்படம் நிச்சயம் மக்களையும் கவரும் என்று, படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.