தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 

சென்னையில் நேற்று ஒரு மணி நேரம் வெளுத்து வாங்கிய மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மதியம் 12 மணியளவில் மழை வெளுத்து வாங்கியது.

மழை காரணமாக, சென்னை அண்ணாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக மாறின. வில்லிவாக்கம் சுரங்கப்பாதையில் இடுப்பளவுக்கு மேல் தண்ணீர் தேங்கியது.

சென்னை அண்ணாநகரில் அதிகபட்சமாக ஒரு மணி நேரத்தில் 11 செ.மீ மழையும், வில்லிவாக்கத்தில் 9.9 செ.மீ மழையும், கொளத்தூரில் 7 செ.மீ மழையும் பதிவானது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது. 

RELATED ARTICLES

Recent News