ஸ்பெயின் நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதில் கிழக்கு வலேன்சியா பகுதி மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
கனழையை அடுத்து ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி சுமார் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் வெள்ளத்தில் கார்கள், மரக்கிளைகள் மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் அடித்துசெல்லப்பட்டன.
இது சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பை விட அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நூற்றாண்டின் மிக மோசமான இயற்கை பேரிடராக இது கருதப்படுகிறது.