தமிழ் சினிமாவை பொறுத்தவரை விஜய் தான் நம்பர் ஒன் என்று வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு சமீபத்தில் கூறியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நடிகை த்ரிஷா சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், யார் நம்பர் ஒன்? அஜித்தா? விஜய்யா? என்று கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அவர், எண்களின் விளையாட்டில் எனக்கு நம்பிக்கை இல்லை. தங்களுடைய முந்தைய படங்களின் வெற்றி தோல்வி தான், யார் நம்பர் ஒண் என்ற இடத்தை கொடுக்கிறது என்று தெரிவித்தார்.
எனவே, விஜய் அஜித் ஆகிய இருவரில், ஒருவரைத் தேர்வு செய்ய முடியாது என்று த்ரிஷா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.