ராஜேஷ் இயக்கத்தில், ஜெயம் ரவி நடிப்பில் தீபாவளி பண்டிகை அன்று ரிலீஸ் ஆன திரைப்படம் பிரதர். முதல் நாளில் இருந்தே கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இந்த திரைப்படம், வசூலில் பெரும் சரிவை சந்தித்து வருகிறது.
இந்நிலையில், இப்படத்திற்காக, ஜெயம் ரவி மிகப்பெரிய ரிஸ்க் எடுத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அதாவது, விநியோகஸ்தர் ஒருவருக்கு 21 கோடி ரூபாய் தரவேண்டிய நிலைக்கு, பிரதர் படத்தின் தயாரிப்பாளர் தள்ளப்பட்டாராம்.
இதனால், பணத்தை கொடுத்தால் தான் படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 17 கோடி ரூபாயை படக்குழு தயார் செய்த நிலையில், 4 கோடி ரூபாயை, ஜெயம் ரவி வழங்கியுள்ளாராம்.
இவ்வளவு பிரச்சனைகளை மீறி தான், பிரதர் திரைப்படம் ரிலீஸ் ஆனது. ஆனால், இப்படத்திற்கு வரவேற்பு கிடைக்காமல் இருப்பது, ஜெயம் ரவிக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.