ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இஸ்லாமிக் ஆஸாத் பல்கலைக் கழகத்தில் மாணவி ஒருவர் உள்ளாடை மட்டுமே அணிந்தவாறு வளாகத்தில் கடந்த 2-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஈரானின் ஆடைக் கட்டுபாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த மாணவி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து, காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவியை பல்கலைக் கழக வளாக சாலையில், வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் செல்கின்றனர்.
இதற்கு ஐ.நா. சர்வதேச மனித உரிமை அமைப்பின் ஈரானுக்கான பிரதிநிதி மய் சாடோ இந்த விடியோவை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்து, “அதிகாரிகள் நடந்து கொள்ளும் விதம் உள்பட இந்த விவகாரத்தில் அனைத்தையும் கூர்ந்து கண்காணித்து வருகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், நோபல் பரிசு வென்ற ஈரான் மனித உரிமை செயல்பாட்டாளர் நர்கீஸ் முகமதி, சிறையில் இருந்தவாறு இளம்பெண்ணின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.