சிவகங்கை அருகே நாட்டாக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன், அதிமுக கிளைச் செயலாளராக சிவகங்கை நகரில் வசித்து வருகிறார்.
மேலும், ரியல் எஸ்டேட் தொழிலும் நாட்டாகுடியில் உள்ள இவரது பூர்வீக வீட்டில் பெட்டிக்கடையும் நடத்தியும் வருகிறார்.
இந்நிலையில், இன்று காலையில் வழக்கம் போல கடையை திறக்க நாட்டாகுடிக்கு சென்ற போது கடை வாசலில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சூழ்ந்து கொண்டு அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருப்பாச்சேத்தி காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மானாமதுரை டிஎஸ்பி நிரேஸ் பழனிவேல் சம்பவ இடத்தை ஆய்வு செய்தார்.
போலீசார் முதற்கட்ட விசாரணையில் நாட்டாக்குடியில் உள்ள கோயிலில் சிலை வைப்பது தொடர்பான பிரச்சனை இருந்து வந்ததாகவும், அந்த முன்பகை காரணமாக கொலை நடந்திருக்கலாம் என தெரியவந்தது.