உலகில் வலிமை மிக்க ஜனநாயக நாடான அமெரிக்காவில் இன்று அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அமெரிக்க வரலாற்றில் இதுவரை காணாத அளவுக்கு, கடும் போட்டி நிலவுகிறது.
இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களமிறங்கியுள்ளார்.
தற்போது நடைபெறும் அதிபர் தேர்தலில் முதல்கட்ட வாக்குப் பதிவு (இந்திய நேரப்படி) புதன்கிழமை (நவ.6) அதிகாலை 4.30 மணிக்கு நிறைவடையும். இறுதிக்கட்ட வாக்கெடுப்பு (இந்திய நேரப்படி) புதன்கிழமை காலை 11.30 மணிக்கு நிறைவடையும். அதற்குப் பிறகுதான் தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.