பிரபல தனியார் பால் விலை உயர்வு!

தமிழகத்தில் பிரபல தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் ஆவின் பால் மட்டுமின்றி பல தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தனியார் நிறுவனங்களில் சுமார் 1.50 கோடி லிட்டர் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகின்றன.

இந்நிலையில், தமிழகத்தில் ஆவின் பாலுக்கு அடுத்தபடியாக அதிகளவில் விற்பனையாகும் தனியார் பால் நிறுவனமாக ஆரோக்யா நிறுவனம் இன்று (நவ.8) முதல் முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளது.

இதனால் பால் சார்ந்த உணவுப் பொருள்கள் அனைத்தும் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News