நடிகர் தனுஷ் தனது 50-வது படமான ராயனை, இயக்கி நடித்திருந்தார். இந்த திரைப்படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி, கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பிறகு, இட்லிக் கடை என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இதில், அருண் விஜய் ஹீரோவாகவும், தனுஷ் சிறப்பு தோற்றத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நடிகர் தனுஷின் 55-வது படத்தின் பூஜை இன்று போடப்பட்டுள்ளது.
இதுதொடர்பான புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளது. ரங்கூன், அமரன் ஆகிய படங்களை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி தான், இந்த படத்தையும் இயக்க உள்ளார். மேலும், பிரபல சினிமா ஃபைனான்சியர் மதுரை அன்பு தான் படத்தை தயாரிக்க உள்ளார்.