தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்திய கிரிக்கெட் அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.
முதல் போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீடு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் ஃபீல்டிங் தேர்வு செய்த நிலையில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா- சஞ்சு சாம்சன் களமிறங்கினர். இதில் அபிஷேக் சர்மா 7 ரன்களிலும், அடுத்து வந்த கேட்பன் சூர்யகுமார் யாதவ் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
ஒற்றை ஆளாக நின்று சிக்சர்களையும், பவுண்டரிகளையும் விளாசி ரன்களை குவித்துக் கொண்டிருந்தார் சஞ்சு சாம்சன். 27 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 47 பந்துகளில் சதமடித்து மிரட்டினார். மறுபுறம் திலக் வர்மா 33 ரன்களில் கேட்ச் கொடுத்துவிட்டு வெளியேறினார். சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சனை 50 பந்துகளில் 107 ரன்களை குவித்து 16-வது ஓவரில் வெளியேறினார்.
இதனையடுத்து ஹர்திக் பாண்டியா 2 ரன்கள், ரிங்கு சிங் 11, அக்சர் படேல் 7, அர்ஷ்தீப் சிங் 5, ரவி பிஷ்னோய் 1 என இந்திய அணி 20 ஓவர் முடிவில் 202 ரன்களை எடுத்திருந்தது.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஜெரால்டு கோட்ஸீ 3, மார்கோ யான்சென், கேசவ் மஹராஜ், கபாயோம்ஸி பீட்டர், பேட்ரிக் க்ருகெர் ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.
அடுத்து, 203 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி தொடக்கம் முதலே இந்திய அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் திணறியது.
அதிகபட்சமாக ஹெய்ன்ரிச் கிளாசன் 25 ரன்களும், மார்கோ ஜென்சன் 23 ரன்கள் எடுத்தனர். வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய் இருவரும் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த தென் ஆப்பிரிக்க அணி 17.5வது ஓவரில் அனைத்து விக்கெட்களை இழந்து 141 ரன்களில் இந்தியாவிடம் தோல்வியடைந்தது.