கடலூர் அருகே, வக்ஃபு வாரிய சட்டமசோதாவை கைவிட வலியுறுத்தி, தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமான சொத்துக்களை, இனி அரசே நிர்வகிக்கும் என்று, புதிய சட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சட்ட மசோதாவிற்கு, இஸ்லாமியர்கள் தரப்பில் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த எதிர்ப்பின் ஒரு பகுதியாக, கடலூர் மாவட்டம் மஞ்சகுப்பம் பகுதியில், தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் முகமது யாசின் தலமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், செயலாளர் அப்துல் வஹாப், மாவட்ட பொருளாளர் அப்துல் காதர் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.