‘தீபாவளி சீட்டு’ நடத்தி மோசடி – பணத்தை இழந்த மக்கள் குமுறல்!

திருப்பத்தூர் அருகே, தீபாவளி சீட்டின் மூலமாக பணத்தை இழந்த மக்கள், அதனை மீட்டுத் தரக்கோரி, காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் காளியம்மாள் லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர், அப்பகுதியில் உள்ள பல்வேறு பெண்களிடம், தீபாவளி சீட்டு நடத்தி வந்துள்ளார்.

மாதம் ஆயிரம் ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை பெற்று வந்த ராஜேந்திரன், தீபாவளி முடிந்ததும், தங்க நகை தருவதாக உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில், ராஜேந்திரனிடம் பணத்தை கொடுத்த பெண்கள், தங்க நகை பெறுவதற்காக அவரது வீட்டிற்கு முன் வந்தபோது, வீட்டை காலி செய்துவிட்டு, அவர் தப்பிச் சென்றது தெரியவந்தது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெண்கள், தங்களது பணத்தை மீட்டுத் தரக்கோரி, காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News