12 மீட்டர் நீளம்.. கனரக வாகனங்களுக்கு கொடைக்கானலில் தடை..

12 மீட்டருக்கு மேல் நீளம் கொண்ட கனரக வாகனங்கள், கொடைக்கானல் மலைப்பகுதியில் வருவதற்கு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள், பாதுகாப்புடன் இருப்பதற்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில், பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 12 மீட்டருக்கு மேல் நீளம் உள்ள கனரக வாகனங்கள், வரும் 18-ஆம் தேதி முதல், மலைப்பகுதியில் நுழைவதற்கு, மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.

போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காகவும், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காகவும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News