மதுரை மாநகர் வைகை வடகரை ஆழ்வார்புரம் பகுதியை சேர்ந்த திவ்யா (28) என்ற இளம்பெண் தனது கணவர் மாரிமுத்துவுடன் வசித்து வருகிறார். திவ்யாவின் வீட்டின் அருகே சில இளைஞர்கள் அவ்வப்போது மது அருந்தியுள்ளனர். இதனை பார்த்த வீட்டின் அருகே மது குடிக்க கூடாது என எச்சரித்துள்ளார்.
திவ்யாவின் எச்சரிக்கையை மீறி அந்த இளைஞர்கள் மது அருந்திவிட்டு வீட்டு வாசலிலயே பாட்டில்களை உடைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து திவ்யா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் இன்று அதிகாலை திவ்யாவின் வீட்டில் மதுபாட்டிலில் பெட்ரோலை நிரப்பி வந்து பெட்ரோல் குண்டை வீசி சென்றுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த மதிச்சயம் காவல்துறையினர், திவ்யாவின் புகாரின் பேரில் பெட்ரோல் குண்டு வீசியதாக மதுரை ஆழ்வார்புரம் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் (19), சோனைமுத்து (19) ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.