சூர்யா நடிப்பில், சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், நேற்று முன்தினம் ரிலீஸ் ஆன இந்த திரைப்படம், கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இந்நிலையில், இப்படம் ரிலீஸ் ஆவதற்காக, சூர்யா மேற்கொண்ட தியாகமான செயல் தெரிய வந்துள்ளது. அதாவது, இந்த திரைப்படம் ரிலீஸ் ஆக வேண்டும் என்றால், சினிமா ஃபைனான்சியருக்கு 75 கோடி ரூபாய் தர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால், தனது சொந்த பணம் 35 கோடி ரூபாயை தருவதற்கு, சூர்யா முன் வந்துள்ளார். அதன்பிறகு தான், கங்குவா படம் ரிலீஸ்-க்கு தயார் ஆனது என்று, சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.