கார்த்திகை முதல் நாள்.. விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்..

தஞ்சை அருகே, கார்த்திகை முதல் நாளையொட்டி, ஐயப்ப பக்தர்கள், மாலை அணிந்து, விரதத்தை தொடங்கினர்.

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் முதல் நாள் அன்று, ஐயப்ப பக்தர்கள், மாலை அணிந்துக் கொள்வது வழக்கம். அந்த வகையில், இன்று கார்த்திகை முதல் நாள் என்பதால், பல்வேறு ஐயப்ப பக்தர்கள், மாலை அணிந்துக் கொண்டு, தங்களது விரதத்தை தொடங்கினர்.

இதேபோல், தஞ்சை மாவட்டம் ஆற்று பாலம் அருகே உள்ள ஐயப்ப சன்னதியிலும், ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, தங்களது விரதத்தை தொடங்கியுள்ளனர்.

RELATED ARTICLES

Recent News