வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் வண்டுகள்! பயணி அதிர்ச்சி!

வந்தே பாரத் ரயிலில், பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவில், வண்டுகள் இருந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் ஏர்வாடி பகுதியை சேர்ந்த முருகன், வந்தே பாரத் ரயிலில், திருச்சிக்கு சென்றுள்ளார். அப்போது, வழங்கப்பட்ட காலை உணவில், வண்டுகள் கிடந்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உணவு வழங்கிய ஊழியரிடம் புகார் அளித்தார். ஆனால், அதற்கு அலட்சியமாக அவர்கள் பதில் அளித்துள்ளனர்.

இதனால் அதிருப்தி அடைந்த முருகன், இந்த சம்பவம் தொடர்பாக, ரயில்வேதுறையிடம் புகார் அளித்துள்ளார். வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில், வண்டுகள் கிடந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News