உத்திரமேரூர் அருகே, மருத்துவர்களின் தட்டுப்பாட்டால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக, அரசு மருத்துவர் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், செவிலியர் குடியிருப்பு திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வை தொடர்ந்து, மருத்துவர் கண்ணதாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், உத்திரமேரூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில், 14 மருத்துவர்கள் பணியாற்ற வேண்டிய தேவை உள்ளது என்று தெரிவித்தார்.
ஆனால், 5 மருத்துவர்கள் தான் பணியாற்றி வருவதாகவும், மருத்துவர்களின் பற்றாக்குறையால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில், சிரமம் ஏற்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக மேலிடத்தில் முறையிட்டபோதும், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், மருத்துவர் கூறினார்.