நயன்தாராவும், விக்னேஷ் சிவனும், கடந்த 2022-ஆம் ஆண்டு, திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களது திருமண விழா, வீடியோவாக எடுக்கப்பட்டு, அது பிரபல ஓடிடி நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.
ஆனால், இந்த டாக்குமெண்டரியில் பயன்படுத்தப்பட்ட ‘நானும் ரௌடி தான்’ பட பாடல்களுக்கு, அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், NOC சான்றிதழ் வழங்கவில்லை. இதனால், டாக்குமெண்டரி தயார் ஆன பிறகும், ரிலீஸ் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, வேறு விதமான முறையில் வீடியோவை எடிட் செய்து, ரிலீஸ் செய்ய முயற்சித்தனர்.
இந்நிலையில், சமீபத்தில் இந்த டாக்குமெண்டரியின் டிரைலரை வெளியானது. இந்த டிரைலரில், வெறும் 3 நொடிகளுக்கு, ‘நானும் ரௌடி தான்’ படம் தொடர்பான வீடியோக்கள் இடம்பெற்றுள்ளன. இதனை அறிந்த தனுஷ், நயன்தாராவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதனால் கடுப்பான நயன்தாரா, தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நானும் ரௌடி தான் பாடல், இன்றளவும் பாராட்டப்பட்டு வருகிறது. அதற்கு காரணம், அந்த படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகள், உண்மையான உணர்ச்சியின் மூலம் வந்தது.
அதனைவிட சிறந்த இசையை, எங்கள் டாக்குமெண்டரியில் பயன்படுத்த முடியாது. ஆனால், அந்த இசையையும், அந்த படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகளையும் பயன்படுத்த கூடாது என்று மறுத்தது, என்னை இதயத்தை உடைத்துவிட்டது” என்று கூறியுள்ளார்.
மேலும், “உன்னுடைய அப்பாவியான ரசிகர்கள் முன்பு, இசை வெளியீட்டு விழாக்களில் காட்டிக் கொள்வதை போல், பாதியாவது நீ இருந்திருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். ஆனால், ரசிகர்களுக்கு நீ என்ன போதிக்கிறாயோ, அதனை பின்பற்றவே இல்லை. குறைந்த பட்சம் என்னிடமும், எனது துணையிடமும், நீ அப்படியில்லை” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.