சென்னை வேளச்சேரி அருகே, போதை பொருள் விற்பனை செய்த இரண்டு பேரை, காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை வேளச்சேரியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, போதைப் பொருள் விற்பனை செய்து வந்த இரண்டு பேரை, கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மும்பையில் இருந்து போதைப் பொருட்களை வாங்கி வந்து, ஐடி ஊழியர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, இரண்டு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், சிறையில் அடைத்தனர்.