5000 துணை ராணுவப்படையினரை மணிப்பூருக்கு அனுப்பி வைக்க முடிவு

மணிப்பூரில் இயல்புநிலைக்கு கொண்டுவருவதற்கு, துணை ராணுவப்படையினர் 5000 பேரை அனுப்ப உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

ஜிரிபம் மாவட்டத்தில் 6 பேரின் உடல் கண்டெடுக்கப்பட்டதில் இருந்து மீண்டும் மாநிலத்தில் வன்முறை தலைதுாக்கியது. அமைச்சர்கள், எம்.ஏல்.ஏ.க்கள் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது.

இம்பால் பள்ளத்தாக்கில் நேற்று அமைதியற்ற சூழல் நிலவியது. மேலும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் நிலவுவதால், இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மேலும் 5000 துணை ராணுவப்படையினரை மணிப்பூருக்கு அனுப்பி வைக்க முடிவு எடுக்கப்பட்டது. மேலும் வன்முறை தொடர்பான விசாரணை நடத்தும் பொறுப்பு என்.ஐ.ஏ.,விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News