வாடகை CAR-ஐ அடமானம் வைத்த இளைஞர் கைது!

ஜோலார்பேட்டை அருகே, வாடகைக்கு வாங்கிய காரை, அடமானம் வைத்து மோசடி செய்த நபரை, காவல்துறையினர் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள ஆசிரியர் நகரை சேர்ந்தவர் மோகன். டிராவல்ஸ் நடத்தி வரும் இவர், யுவராஜ் என்ற இளைஞருக்கு, காரை வாடகைக்கு கொடுத்துள்ளார்.

ஆனால், காரை வாங்கிய யுவராஜ், நீண்ட நாட்களாகியும் திருப்பி தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த மோகன், காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணையில், காரை வாங்கிய யுவராஜ், அதனை 2 லட்சம் ரூபாய்-க்கு அடமானம் வைத்து, மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

RELATED ARTICLES

Recent News