மீண்டும் இணைந்த ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி! காரணம் என்ன?

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவி ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக, சில மாதங்களுக்கு முன்பு பிரிந்துவிட்டனர். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் சைந்தவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், மலேசியா நாட்டில் ஜி.வி.பிரகாஷின் மியூசிக் Concert நடக்க இருப்பதாகவும், அதில் நான் கலந்துக் கொள்ள உள்ளேன் என்றும் கூறியுள்ளார்.

விவாகரத்திற்கு பிறகும், இருவரும் இணைந்து பணியாற்ற இருப்பது, ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News