கடந்த காலங்களில் பொங்கல்தொகுப்பு வழங்கிய போது குறைகள் சுட்டிக்காட்டிப்பட்டது.
ஒரு சில இடங்களில் நடந்த தவறுகளை மிகைப்படுத்தி தகவல்கள் பரப்பட்டதால் அதனை தவிர்க்கும் விதமாக கரும்பு கொள்முதல் செய்யப்பட வில்லை என அமைச்சர் கூறியுள்ளார்.
கரும்பு கொள்முதல் குறித்து முதலமைச்சரிடம் ஆலோசனை மேற்கொண்டு முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் கரும்பு வழங்குவது குறித்து முதலமைச்சர் தான் முடிவு எடுக்க வேண்டும் என கூறினார்.
பொங்கல் தொகுப்பை மக்களிடம் கொண்டு சேர்க்கும் கடமை கூட்டுறவுத் துறைக்கு இருக்கிறது, அதை எவ்வாறு கொண்டு சேர்க்க இருக்கிறீர்கள் திட்டத்தை எவ்வாறு செயல்படுத்த இருக்கிறார்கள் என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தப்படுகிறது.
3 லட்சம் சக்கரை அட்டைகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும்
என கூறினார்.