சின்னத்திரையில் பிரபல நடிகராக வலம் வருபவர் வெற்றி வருபவர். தனி ரசிகர் பட்டாளமே கொண்டுள்ள இவர், தற்போது திருமணம் செய்துக் கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, வெற்றி வசந்தும், பிரபல சீரியல் நடிகை வைஷ்ணவியும், சில மாதங்களாக காதலித்து வந்தனர். இந்த காதல், தற்போது அடுத்த கட்டமான கல்யாணத்திற்கு சென்றுள்ளது.
இருவருக்கும், வரும் நவம்பர் 28-ஆம் தேதி தான், திருமணம் நடக்க உள்ளதாம். இதுதொடர்பான திருமண அழைப்பிதழின் புகைப்படமும், இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.