தமிழகம் முழுவதும் இன்று (நவ.23) கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள இளங்குடியில் சமுதாயக் கூடத்தில் கிராம சபை கூட்டம் உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன் மேற்பார்வையில் இளங்குடி ஊராட்சி தலைவர் ஜோசப் தலைமையில் நடைபெற்றது.
அப்பொழுது கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஏழு பேர் மட்டுமே கலந்து கொண்ட நிலையில் 103 பேர் பங்கேற்றதாக மாவட்ட ஆட்சியருக்கு பதில் கொடுத்தது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் குறித்து இன்று கேள்வி எழுப்பிய கிராம மக்களை ஊராட்சி மன்ற தலைவர் ஜோசப் சத்தமாக பேசி அவருக்கு ஆதரவான பெண்களை கேள்வி கேட்பவர்களை அடிக்கக் கூறியதால் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டு கிராம சபை கூட்டம் பாதியிலேயே முடிவடைந்தது.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் இருதரப்பை விளக்கி விட்டு கலைந்து போக செய்தனர்.