தமிழக அரசே ஒத்துக்கொண்டுள்ளது.. தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்..

போதுமான நிதியை வழங்குகின்ற போதும், தமிழக அரசு மத்திய அரசை குற்றஞ்சாட்டுகிறது என்று, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தூத்துக்குடி விமான நிலையத்திற்கு இன்று வருகை தந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் மின்மாற்றி வாங்கியதில் 400 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டுகிறது என்றும், இதற்கெல்லாம் தமிழக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசின் நீதி ஒதுக்கீடு 33 சதவீதம் இருந்த நிலையில், தற்போது 34 சதவீதமாக அதிகரித்துள்ளது என மத்திய நிதி குழு கூட்டத்திலேயே தமிழக அரசு ஒப்புக்கொண்டுள்ளது என்றும் கூறினார்.

இவ்வாறு போதுமான நிதியை வழங்குகின்ற போதும், மத்திய அரசை, தமிழக அரசு குற்றஞ்சாட்டுகிறது என்று, தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்தார்.

RELATED ARTICLES

Recent News