இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இன்றும் (நவ.24), நாளையும் (நவ.25) நடைபெறுகிறது. இதில் மொத்தம் 574 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்றுள்ளனர்.
அதன்படி இந்திய நேரப்படி இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கியது. இதில் 10 அணிகளின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
இன்றைய ஏலத்தில் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் ஐயர் (26.75 கோடி) பெற்றிருந்தார்.
ஆனால் அந்த சாதனை அடுத்த சில நிமிடங்களில் ரிஷப் பந்த் முறியடித்தார். அவரை லக்னௌ அணியை ரூ.27 கோடிக்கு வாங்கியுள்ளது.
இதுவரை ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள்:
பஞ்சாப் கிங்ஸ்:
- அர்ஷ்தீப் சிங் – ரூ.18 கோடி
- ஷ்ரேயாஸ் ஐயர் – ரூ.26.75 கோடி
- சாஹல் – ரூ.14 கோடி
குஜராத் டைட்டன்ஸ்:
- ககிசோ ரபாடா – ரூ.10.75 கோடி
- ஜாஸ் பட்லர் – ரூ.15.75 கோடி
- சிராஜ் – ரூ.12.25 கோடி
டெல்லி கேப்பிடல்ஸ்:
- மிட்செல் ஸ்டார்க் – ரூ.11.75 கோடி
- கே.எல்.ராகுல் – ரூ.14 கோடி
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்:
- ரிஷப் பந்த் – ரூ.27 கோடி
- டேவிட் மில்லர் – லக்னோ (ரூ. 7.5 கோடி)
சன்ரைசர்ஸ் ஐதராபாத்:
- முகமது ஷமி – ரூ.10 கோடி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ:
- லியாம் லிவிங்ஸ்டன் – ரூ.8.75 கோடி