உண்டியல் பணம் திருட்டு.. பதறிய கோவில் நிர்வாகிகள்..

செய்யாறு அருகே, கோவில் உண்டியலில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள மோரணம் கிராமத்தில் குயிலார் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் நிர்வாகிகள் நேற்று இரவு கோவிலை மூடிவிட்டு, மறுநாள் காலை திரும்பி வந்துள்ளனர்.

அப்போது, கோவில் உண்டியலில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News