ஏரியில் மீனவரின் வலையில் மலைப்பாம்பு சிக்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட்டை மாவட்டம் ஹசனாபாத் அருகில் இருக்கும் எல்லம்மா ஏரியில் மீனவர்கள் நேற்று மீன் பிடித்த கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களில் ஒருவர் வீசிய வலையில் வழக்கத்திற்கு மாறாக கனமான ஏதோ ஒன்று சிக்கியது. எனவே பெரிய மீன் அல்லது முதலை சிக்கி இருக்கலாம் என்று கருதி அந்த மீனவர் வலையை இழத்தார்.
ஆனால் அதிர்ச்சி அளிக்கும் வகையில் வலையில் மலைப்பாம்பு ஒன்று சிக்கியிருந்தது. உடனடியாக அந்த மீனவர் மலைப்பாம்புடன் படகை கரைக்கு செலுத்தி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் வலையில் சிக்கிய மலைப்பாம்பை மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.