தஞ்சை அருகே, ஆட்சியர் அலுவலகம் முன்பு, இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சையில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வந்த இளைஞர், உடலில் திடீரென பெட்ரோலை ஊற்றிக் கொண்டு, தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், அவரை தடுத்து நிறுத்தி, விசாரணையில் ஈடுபட்டனர். அதில், தற்கொலைக்கு முயற்சி செய்தவர் மாப்பிள்ளை நாயக்கன்பட்டியை சேர்ந்த முருகேசன் என்பதும், 20 லட்சம் ரூபாயை உறவினர் ஏமாற்றிவிட்டதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, காவல்நிலையத்திற்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். ஆட்சியர் அலுவலகம் முன்பு, இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.