வேளச்சேரியில் வீடுகளை அகற்றி பூங்கா, பார்க்கிங் அமைக்க திட்டமிட்ட இருப்பதை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை வேளச்சேரி உள்ள ஜெகநாதபுரம், ராஜலட்சுமி தெரு, சசி நகர், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 80 ஆண்டுகளாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இப்பகுதியில் இருக்கும் வீடுகளை இடித்து விட்டு, பூங்கா மற்றும் பார்க்கிங், போன்றவை அமைப்பதற்காக மாநகராட்சி அதிகாரிகள் கணக்கெடுக்க வந்துள்ளனர். அதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.