ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார். மேலும் அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி செய்தி தொடப்ராளர் கூறியிருப்பதாவது:-
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ்க்கு அசிடிட்டி (acidity) பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் நலமாக உள்ளார். அடுத்த சில மணி நேரங்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.