மீண்டும் மோதும் தனுஷ் – நயன்தாரா?

நயன்தாராவின் திருமணம் தொடர்பான ஆவணப் படத்தின் டிரைலரில், நானும் ரௌடி தான் படத்தின் சில காட்சிகள் பயன்படுத்தப்பட்டிருந்தது. இதனால், அந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், நயன்தாராவுக்கு, வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இதன்காரணமாக, நடிகர் தனுஷை மிகவும் கடுமையான முறையில் விமர்சித்து, நயன்தாரா அறிக்கை வெளியிட்டிருந்தார். இது, இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், நடிகர் தனுஷ்-ம், நயன்தாராவும், மீண்டும் மோதிக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, தனுஷின் இட்லிக் கடை படத்தை ஏப்ரல் 10-ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். இதேபோல், நயன்தாராவின் ராக்காயி என்ற படத்தையும், அதே தேதியில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முயற்சித்து வருகிறார்களாம். இந்த தகவல் உண்மையாகும்பட்சத்தில், இருவரும் தரையில் மட்டுமின்றி, திரையிலும் மோதிக் கொள்வார்கள்.

RELATED ARTICLES

Recent News