பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இந்த படத்திற்கு பிறகு, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக மாறிய இவர், கர்ணன், மாமன்னன், வாழை ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருந்தார்.
தற்போது, பைசன் என்ற படத்தை இயக்கி வரும் மாரி செல்வராஜ், அடுத்ததாக, கார்த்தியுடன் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவரது லைன்-அப்பில் புதிதாக இன்னொரு நடிகர் இணைந்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, கார்த்தியின் படத்தை முடித்த பிறகு, விஜய்சேதுபதியுடன் மாரி செல்வராஜ் இணைய உள்ளாராம். இதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருகிறதாம்.