சுந்தர் பிச்சை, சல்மான்கான் உள்பட 40 கோடி டுவிட்டர் பயனாளிகளின் தகவல் திருட்டு..!

சுந்தர் பிச்சை உள்பட 40 கோடி டுவிட்டர் பயனாளர்களின் தகவல் திருடு போய் இருப்பதாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, பாலிவுட் நடிகர் சல்மான்கான் உள்பட 40 டுவிட்டர் பயனர்களின் முக்கிய தகவல்களை ஹேக்கர்கள் திருடி உள்ளதாகவும் அதனை வைத்து அவர்கள் பேரம் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

பிரபலங்களின் ஈமெயில் ஐடி, செல்போன் எண் உள்ளிட்ட தகவல்கள் அதில் உள்ளன. இது தொடர்பாக டுவிட்டர் நிறுவனம் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயனாளிகள் தெரிவித்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News