கர்நாடக சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் நர்த்தன். இவர் இயக்கிய பைரதி ரணங்கள் என்ற திரைப்படம், சமீபத்தில் ரிலீஸ் ஆகி, நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் இயக்குநர் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், தனது அடுத்த படத்தை கே.வி.என் புரொடக்ஷன் தயாரிக்க இருப்பதாகவும், யார் நடிக்க உள்ளார் என்பது தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றும் கூறினார்.
மேலும், சூர்யா, ராம் சரண் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இறுதி செய்த பின் அறிவிப்பை வெளியிடுவோம் என்றும் தெரிவித்தார். இவரது இந்த பேட்டி, சூர்யா ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.