வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரியங்கா காந்தி இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்று கொண்டார். அவருக்கு சபாநாயகர் ஓம் பிர்லா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். அதைத்தொடர்ந்து விதியின் கீழ் இரண்டில் ஒரு தொகுதியான வயநாடு தொகுதியை ராஜினாமா செய்திருந்தார் ராகுல் காந்தி.
இதையடுத்து வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் காங்கிரஸ் சார்பாக பிரியங்கா காந்தி போட்டியிட்டார். இதில் சுமார் நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றார் பிரியங்கா காந்தி இன்று நாடாளுமன்ற எம்பி ஆக பதவியேற்றுக் கொண்டார்.
ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் மக்களவையில் அமரும்போது அவர்களின் தாயார் சோனியா காந்தி மாநிலங்களவையில் இடம் பெற்றுள்ளார். தனது வயநாடு வெற்றியை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் மக்களின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருப்பதாக பிரியங்கா கூறியிருந்தார்.