ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, வங்கி ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில், இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சந்தைப் பேட்டை தெருவில், ரத்தக்கரையுடன், சாக்கு பை ஒன்று கிடந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சாக்கு பையை ஆய்வு செய்துள்ளனர்.
அதில், பிரகாஷ்ராஜ் என்ற வங்கி ஊழியர், ரத்த காயங்களுடன், உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், 2 பேரை கைது செய்துள்ளனர். தற்போது, அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.