குளித்தலை அருகே, சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை, காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஆர்ச்சம்பட்டியில், மனமகிழ் மன்றம் என்ற பெயரில், சூதாட்ட கிளப் நடத்தப்பட்டதாக புகார் எழுந்தது.
மேலும், சூதாட்டத்தில் ஈடுபட வருபவர்களால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை, காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், 15 பைக்குகள், ஒரு கார் உள்ளிட்ட வாகனங்களையும், இரண்டு லட்சம் ரூபாய் பணத்தையும், பறிமுதல் செய்துள்ளனர்.