விஜய்சேதுபதி நடிப்பில், நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில், கடந்த ஜூன் மாதம் ரிலீஸ் ஆன திரைப்படம் மகாராஜா. நான் லீனியர் கதை சொல்லல் மூலமாக, ரசிகர்களை கட்டிப்போட்ட இந்த திரைப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது.
மேலும், 100 கோடி ரூபாய் வரை வசூலித்து, பாக்ஸ் ஆபிசிலும் சாதனை புரிந்தது. இந்த பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இப்படம் சீனாவிலும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சீனாவில் இப்படம் எவ்வளவு வசூலித்துள்ள என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, முதல் நாளில் மட்டும், 10 கோடி ரூபாய் வரை, இப்படம் வசூலித்துள்ளதாம். இப்படத்திற்கு சீனாவிலும் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது, ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.