சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘புஷ்பா 2’. டிசம்பர் 5-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள இந்த திரைப்படம், தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், பெங்காலி உள்ளிட்ட மொழிகளிலும், டப்பிங் செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இந்த பிரம்மாண்ட திரைப்படம் தொடர்பான பிரம்மாண்ட தகவல் ஒன்று, இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது, உலகம் முழுவதும் 12 ஆயிரம் திரையரங்குகளில், இந்த திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாம். மேலும், தமிழகத்தில் மட்டும் சுமார் 800 திரையரங்குகளில் இப்படம் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சூர்யாவின் கங்குவா படம் 11 ஆயிரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆன நிலையில், அதனை விட அதிகமாக இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.