கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் தனது 44-வது படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார். இந்த படம், அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்திற்கு பிறகு, ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் படத்தில், சூர்யா நடித்து வருகிறார். நாட்டார் தெய்வ வழிபாட்டை மையமாக வைத்து, த்ரில்லர் பாணியில் இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், லப்பர் பந்து படத்தில் கெத்து தினேஷ்-க்கு ஜோடியாக நடித்த ஸ்வாசிகா, சூர்யா 45 படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.